×

நீலகிரியில் ஒரே நாளில் ரூ.21.11 லட்சம் பறிமுதல்: உரிய ஆவணம் இன்றி தொகையை எடுத்து செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

நீலகிரி: தமிழ்நாடு முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் காரில் கொண்டு சென்ற ரூ.86,000 அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உப்பள தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க எடுத்து செல்வதாக கார் உரிமையாளர் தரணீஸ்வரர் கூறியபோதும் உரிய ஆவணங்கள் இல்லை என கூறி பணத்தை வழங்க மறுப்பு தெரிவித்தனர்.

குளித்தலை பகுதியில் ஒரே நாளில் ரூ.3.38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பரமக்குடி அருகே காரில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.94,000 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.21.11 லட்சம் ரொக்கம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. வெளியூர் மக்கள், உள்ளூர் மக்கள், விவசாயிகள் என எவராயினும் ரூ.50,000க்கு மேல் எடுத்து சென்றால் ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மேலூர் பகுதியில் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு சென்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கன்னியாகுமரி மாவட்டம், தஞ்சாவூர் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர், போலீசார் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு அனுவகுப்பு நடத்தினர்.

The post நீலகிரியில் ஒரே நாளில் ரூ.21.11 லட்சம் பறிமுதல்: உரிய ஆவணம் இன்றி தொகையை எடுத்து செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Election Flying Squad ,Tamil Nadu ,Tiruchendur, Tuticorin district ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் போக்குகாட்டும் கோடை மழை மலை காய்கறி விவசாயம் பாதிப்பு